ஐரோப்பா செய்தி

ரஷ்யா தொடர்பு சந்தேகம் – ஆர்மீனியா ஏற்றுமதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பிரித்தானியா

  • March 1, 2026
  • 0 Comments

ரஷ்ய இராணுவ விநியோகச் சங்கிலியுடன் தொடர்புகள் இருப்பதாக The Guardian தகவல் வெளியிட்ட நிலையில் ஆர்மீனியாவிற்கு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய முடிவை பிரித்தானிய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. செஷயரை (Cheshire) தளமாகக் கொண்ட சிக்னெட் டெக்ஸ்கிம்ப் (Cygnet Texkimp) நிறுவனம், கார்பன் ஃபைபர் “ப்ரெப்ரெக்” (carbon fibre prepreg) தயாரிக்க பயன்படும் இரண்டு இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த இலகுரக பொருள் சிவில் மற்றும் இராணுவ பயன்பாடுகளில் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஈரானில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபி (Ayatollah Alireza Arafi) நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான், நீண்டகால உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டு தாக்குதலில் உயிரிழந்த நிலையில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அராஃபி, கடந்த சில தசாப்தங்களாக கமேனியின் அருகில் இருந்தவர் என்பதுடன் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கார்டியன் கவுன்சில் (Guardian Council, Iran) போன்றவற்றில் முக்கிய பதவிகளிலும் இருந்தார். […]

உலகம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : எண்ணெய் விலை 100 டொலராக உயர வாய்ப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் தெஹ்ரானின் பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்றுமதி இடையூறுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக OPEC+ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இரு நாடுகள் தெரிவித்துள்ளன. OPEC+ எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இடையூறுகளைத் தணிக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே இன்றைய தினம் கச்சா […]

ஐரோப்பா

AI வளர்ச்சியால் பாதிக்கப்படாத துறைகளுக்கு மாறும் முதலீட்டாளர்கள்

  • March 1, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் AI வளர்ச்சியின் பின்னணியில், முதலீட்டாளர்கள் தற்போது ஹாலோ வர்த்தகம் (Halo trade) எனப்படும் புதிய முதலீட்டு அணுகுமுறையை நோக்கி திரும்பி வருகின்றனர். கனமான சொத்துக்கள், குறைந்த காலாவதி அபாயம் என்பதன் சுருக்கமே ஹாலோ எனப்படுகிறது. AI தாக்கத்தால் பாதிக்கப்படாத ஆற்றல், போக்குவரத்து உட்கட்டமைப்பு, பயன்பாடுகள் போன்ற உறுதியான இயற்பியல் சொத்துகள் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் போக்கே இதன் மையக் கருத்தாகும். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மெகா-கேப் (mega-cap) தொழில்நுட்ப […]

இலங்கை

அனைத்து விமானங்களும் இரத்து!

  • March 1, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது அமலில் உள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இன்று (01) அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: UL231 கொழும்பு – துபாய், UL232 துபாய் – கொழும்பு, UL225 கொழும்பு – துபாய், UL226 துபாய் – கொழும்பு, UL217 கொழும்பு – தோஹா, UL218 தோஹா – கொழும்பு, UL253 கொழும்பு – தம்மாம், UL254 தம்மாம் – கொழும்பு, […]

இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு : வரிசையில் நிற்கும் மக்கள் – CPC எச்சரிக்கை!

  • March 1, 2026
  • 0 Comments

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட  CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா, இலங்கையின் எரிபொருள் விநியோகச் சங்கிலி மத்திய கிழக்கில் தற்போதைய மோதல் மண்டலத்திலிருந்து வரவில்லை என்று குறிப்பிட்டார். எனவே, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் விநியோகம் தடைபடாது என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து தொடர்புடைய […]

உலகம்

அமெரிக்க போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது!! ஈரான் எச்சரிக்கை!

  • March 1, 2026
  • 0 Comments

அமெரிக்க போர்க்கப்பல்கள் எதுவும் பாரசீக வளைகுடாவிற்குள் நுழைய  அனுமதிக்கப்படாது என்று முன்னாள் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதியும் ஈரானிய மூத்த அதிகாரியுமான மோஷென் ரெசாய் (Moshen Rezaei) தெரிவித்துள்ளார். அரசு நடத்தும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தந்தி பதிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்காவின் கடற்படைகள் குறித்த பகுதியில் ஆப்ரகாம் லிங்கன் போர் கப்பலை நிலைநிறுத்தியிருந்தது. தாக்குதல்களுக்கு முந்தைய நாட்களில், சில கப்பல்கள்  வளைகுடாவிலும் மற்றவை அரேபியக் கடலிலும் இருந்தன. தாக்குதல்கள் […]

உலகம்

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்!

  • March 1, 2026
  • 0 Comments

ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் 04 பேர் காயமடைந்துள்ளதுடன், 20 பேர் கொண்ட குழுவினர் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ஸ்கைலைட்” என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பல் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள நாடொன்றுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.  தொடர்புடைய செய்தி ஈரான் விவகாரம் : பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் – 06 பேர் உயிரிழப்பு!      

உலகம்

இஸ்ரேல் பாடசாலை மீதான தாக்குதல் : 160 மாணவர்கள் உயிரிழப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினாப் கவுண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்புடைய செய்தி ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு!

உலகம்

ஈரான் விவகாரம் : பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் – 06 பேர் உயிரிழப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் கராச்சியில்  உள்ள அமெரிக்க தூதரகத்தை நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லிம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகளும் துணை ராணுவப் படையினரும் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக காவல்துறை அதிகாரி முகமது ஜவாத் (Mohammad Jawad)  கூறினார். இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

error: Content is protected !!