உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஈரான்மீதான தாக்குதல் ஐ.நா. சாசனத்தை மீறும் செயல்: சபையில் சஜித் கண்டனம்!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலானது ஐ.நா. சாசனத்தைமீறும் செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் Opposition Leader சஜித் பிரேமதாச Sajith Premadasa. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அதேபோல ஐக்கிய அரபு அமீகரம், சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள்மீது ஈரான் நடத்திய தாக்குதலையும் கண்டிக்கின்றோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் எமது நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட […]

இலங்கை செய்தி

ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு: ரிஷாத்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் […]

செய்தி

பிரதம நீதியரசர் முல்லைத்தீவு விஜயம்!

  • March 3, 2026
  • 0 Comments

பிரதம நீதியரசர் Chief Justice பிரீத்தி பத்மன் சூரசேன, Preethi Padman Surasena நேற்று (03) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். நீதிச்சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

உலகம்

ஈரானில் மோதலுக்கு மத்தியில் பதிவான நிலநடுக்கம்!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிராக நடந்து வரும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விளையாட்டு

வடக்கின் போர் மார்ச் 05 ஆம் திகதி ஆரம்பம்!

  • March 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நாளை மறுதினம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி 119 வது முறையாக நடத்தப்படுகின்றது. போட்டியானது மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் […]

இலங்கை செய்தி

ஈரான் உச்ச தலைவர் மறைவு: சம்பாந்துறையில் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச […]

ஐரோப்பா

போர் பதற்றம் : ஈரானே பொறுப்பு – சீனாவின் உதவியை நாடிய பிரான்ஸ்!!

  • March 3, 2026
  • 0 Comments

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot) மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற நிலைமையை தணிக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் (Wang Yi) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் இருவரும் பதற்றத்தைக் குறைக்கப் பாடுபட ஒப்புக்கொண்டதாக பிரெஞ்சு வெளியுறவு  அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,  ஈரானிய மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் தீர்வைத் தேடுவதற்கும் இருநாட்டு தலைவர்களும் இதன்போது உறுதிப் பூண்டுள்ளனர். இதேவேளை பிராந்தியம் முழுவதும் […]

உலகம்

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது!

  • March 3, 2026
  • 0 Comments

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக   குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. நாங்கள் அனைத்து வழக்கமான மற்றும் அவசர தூதரக சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளோம். தூதரகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் நாங்கள் தொடர்பு கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

பழிவாங்கல் வேண்டாம்: கருணை காட்டுங்கள்! இம்ரான் கானுக்காக இலங்கை எம்.பி. களத்தில்!!

  • March 3, 2026
  • 0 Comments

“பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிகிச்சை பெறுவதற்காக மனிதாபிமான ரீதியிலேனும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் Imran Magaroop தெரிவித்தார். விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” பாகிஸ்தானின் ஒரு தலைவராக மட்டுமன்றி, உலகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் இம்ரான் கான். தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு […]

error: Content is protected !!