இலங்கை

ஹோமாகம-சிறிய கூடாரங்களுக்குள் முகம்சுழிக்கும் செயலில் ஈடுபட்ட 24 ஜோடிகள்!

ஹோமாகமவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு  சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளுக்குள் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்தனர் என ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சுற்றிவளைப்பின் போது, சிறிய அறைகளில் இருந்த 24 ஜோடிகள் இருந்தன. இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுது்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கள் குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், காம லீலைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்