அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த மாகாணசபைத் தேர்தலை நடத்துக!

மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எம்.பி. தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பினார்.

இந்நிலையிலேயே இந்தியா சென்று அந்நாட்டு பிரதமர் மோடியை சந்தித்தால் மட்டும் போதாது, ஜனநாயகத்தை நிலைநாட்ட இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“ இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மாத்திரம் சுருங்கிவிடக் கூடாது.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது நீண்டகாலமாகச் செயலிழந்து காணப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு.” என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!