நியூயார்க்கில் கடுமையான பனிப்பொழிவு : 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!
நியூயார்க்கில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏறக்குறைய 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து அல்லது தாமதமடைந்திருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய யுனைடெட் ஏர்லைன்ஸ் யுஏஎல். (United Airlines UAL), ஓசா (Osaid உள்ளிட்ட அமெரிக்க விமான நிறுவனங்கள் இது தொடர்பில் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. இருப்பினும் நிலைமை சவாலாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இன்றைய தினமும் 07 சதவீதமான விமானங்கள் இரத்து செய்யப்படவாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வடகிழக்கின் சில பகுதிகளில் பனிப்புயல் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் அவசரகாலநிலை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.




