ஐரோப்பா

பிரித்தானியாவில் 50 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரித்தானியாவின் கார்ன்வாலில் ( Cornwall) உள்ள கார்டின்ஹாம் (Cardinham) என்ற கிராமத்தில், 50 நாட்களாக தொடர்ந்து மழைப் பெய்துள்ளது.  டிசம்பர் 30 முதல் 441.4 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வழக்கமான மழைப்பொழிவை விட இம்முறை அதிகளவிலான மழைப் பொழிவு பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  குறிப்பாக ஸ்காண்டிநேவியா பகுதியில் அதிகமான வெள்ளம் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதிகளும் இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன.

சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்துக்கு 67 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் பல பகுதிகளுக்கு குளிர் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!