சர்வதேச ரீதியில் சாதனை மட்டத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை!
வெனிசுலாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக சர்வசேத சந்தையில் தங்கத்தின் விலை 4500 அவுன்ஸை விட அதிகரித்து சாதனை மட்டத்தில் உயர்ந்துள்ளது.
வெள்ளி மற்றும் பிளாட்டினமும் உச்சத்தை தொட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பாட் தங்கத்தின் விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9% உயர்ந்து $4,486.55 ஆக உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் 1.1 சதவீதம் உயர்ந்து $4,519.20 அவுன்ஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வெள்ளியும் $69.56 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெள்ளி 141% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சமீபத்திய உலகளாவிய பதற்றங்கள் காரணமாக பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





