ஆஸ்திரேலியாவில் திடீரென எழுந்த ராட்சத அலைகள் – 6 பேர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சில அலைகள் 3.5 மீட்டர் வரை உயர்ந்ததாகத் தெரிகிறது. வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்தனர்.
நேற்று சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்கச் சென்ற இருவர் அலையில் சிக்கினர். அவர்களில் ஒருவர் மட்டுமே பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
வெள்ளிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மெல்பர்னில் கடலுக்குள் இழுக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அலைகளில் சிக்கிய மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருவரையும் வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
(Visited 15 times, 15 visits today)