ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 35பேர் பலி!

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 35பேர் உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த எரிபொருள் நிரம்பு நிலையத்திற்கும் பரவியது.
இதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 6ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது. இவ் விபத்தில் 5பேர் உயிரிழந்ததோடு,115க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
200க்கும் மேற்பட்ட வீர்ர்கள் போராடி தீயை அணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)