இலங்கை

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த விலை உயர்வு நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்   விலை 13  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.

அதேபோல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்  விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

ஆட்டோ டீசலின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 341 ரூபாவாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 359 ரூபாவாகும்.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 231 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் உள்ளூர் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (LIOC), CEYPETCO இன் திருத்தப்பட்ட விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கான முடிவை அறிவித்தது.

இதற்கிடையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

 

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்