இலங்கை

33,000 லீற்றர் எரிபொருளுடன் விபத்துக்குள்ளான பௌசர்!

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் எரிபொருள் தாங்கி பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பௌசரில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான பௌசரில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பௌசர் வீதியில் கவிழ்ந்ததையடுத்து, அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச வாசிகள், கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் வந்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டடுள்ளனர்.

 

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!