ஐரோப்பா

ஹோர்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சென்ற பிரான்ஸ் கப்பல்!

பிரெஞ்சு கப்பல் குழுமமான CMA CGM-க்குச் சொந்தமான  கொள்கலன் கப்பல் ஒன்று , நேற்றைய தினம் ஹோர்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சென்றுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முக்கியமான கடல்வழிப் போக்குவரத்து  பகுதியைக் கடந்து செல்லும் முதல் பிரெஞ்சு கப்பல் இதுவாகும்.

இந்நடவடிக்கையானது ஈரான் பிரான்ஸை ஒரு விரோத நாடாகக் கருதாமல் இருக்கலாம் என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்பு, நடுநிலைமையைக் குறிக்கும் வகையில், அந்தக் கப்பல் தனது தானியங்கி அடையாள அமைப்பின் (Automatic Identification System) இலக்கை ‘உரிமையாளர் பிரான்ஸ்’ என்று மாற்றியது.

இராணுவ நடவடிக்கை சாத்தியமற்றது என்று கூறியுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜலசந்தியை மீண்டும் திறக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!