ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காடு : மக்களை வெளியேறுமாறு உத்தரவு!
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள காஃப்னிஸ் க்ரீக் (Gaffneys Creek) அருகே பாரிய காட்டுத்தீ பரவி வருகிறது.
இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தீ வேகமாக முகடுகளில் பரவியதால், A1 சுரங்கக் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிக உயர்ந்த எச்சரிக்கையை விக்டோரியா அவசர சேவைகள் பிறப்பித்துள்ளது.
மேற்படி காட்டுத்தீ மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளில் மூன்று சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த தீயினால் சுமார் 600 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மீட்பு பணியாளர்கள் அப்பகுதியூடான அணுகலை துண்டித்துள்ளனர்.





