சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்(Vijitha Herath), நவம்பர் 8 முதல் 11, 2025 வரை சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ரியாத்திற்கு(Riyadh) அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹெரத் உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் மற்றும் பல உறுப்பு நாடுகளின் சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் விஜித ஹேரத்தின் வருகை, உலக சுற்றுலா அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் மூலம் இலங்கையின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.





