காசாவில் மீளவும் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மத்தியப் பகுதியில் உள்ள அல்-முக்ரகா ( al-Mughraqa) மற்றும் தெற்கே ரஃபாவின் அல்-மவாசி ( al-Mawasi ) ஆகிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் அமைதி ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் மொத்தமாக 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




