சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை
சிங்கப்பூரில் வீடுகளில் தீ ஏற்படுவதைத் தடுக்க மின்சாரச் சாதனங்களைக் கவனமாகப் பயன்படுத்துமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டுள்ளது.
பொங்கோலில் நேற்று காலை ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 60க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
படுக்கை அறையில் இருந்த மின் சாதனத்திலிருந்து தீ மூண்டதை ஆரம்பப் புலனாய்வு காட்டுவதாகத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மின் இணைப்புகளில் அதிக அளவில் மின்-சாதனங்கள் பொருத்தப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
சாதனங்களைப் பயன்படுத்தாதபோது மின்சாரத்தைத் துண்டிப்பது முக்கியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)