சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்து – 12 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹூபே (Hubei) மாகாணத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் சியாங்யாங்கில் (Xiangyang) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ள நிலையில் இவ்வாறான விபத்துகள் இடம்பெற்று வருவது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.





