ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் நிபுணத்துவம் – உதவிக் கரம் நீட்டும் உக்ரைன்!
ஈரான் வடிவமைத்த ஷாஹெட் ஆளில்லா விமானங்களை உக்ரேனியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஈரானுடனான மோதலில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரைன் உதவி வருவது இதன் மூலம் பகிரங்கமாகியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா இந்த ஆயுதங்களை பயன்படுத்திய நிலையில் அதனை உக்ரைன் வெற்றிகரமாக கையாண்டுள்ளது.
இந்த நுட்பம் தற்போது மத்திய கிழக்கில் ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த கூட்டாளிகளுக்கு உதவியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி கூட்டாளிகளுக்கு உதவி வழங்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு உக்ரைன் உதவி வழங்கியுள்ளது.
இதேவேளை ஆளில்லா விமானப் பாதுகாப்பில் உக்ரேனின் நிபுணத்துவம் காரணமாக, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற ஆதரவைக் கோரியுள்ளன.





