முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக காலணி!
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரான டாக்டர் ஜியாங் லி (Jiayang Li), வயதானவர்கள் தங்கள் சமநிலையைப் பராமரிக்கவும், விழுவதைத் தடுக்கவும் உதவும் வகையில் புதிய காலணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தனது 89 வயதான வழிகாட்டியான பீட்டர் லாங்லோயிஸ் (Peter Langlois) சரியாக நிற்கமுடியாமல் சிரமப்படுவதை அவதானித்ததன் மூலம் இதனை கண்டுப்பிடித்ததாக கூறுகிறார்.
இது வீழ்ச்சி அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவுவதாகவும், 253 சிறிய சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஒரு இன்சோல் (insole) உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குறைந்த மின்னழுத்த பேட்டரியால் இயக்கப்படும் இந்த சாதனம், ஒரே சார்ஜில் தோராயமாக மூன்று மாதங்கள் வரை இயங்கும் என்றும் மொபைல் போன்கள் அல்லது டேப்லெட்களில் விரிவான நடை பகுப்பாய்வை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனத்தின் மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





