ஐரோப்பா

இங்கிலாந்து- தன்னை பார்க்க வராததால் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா கொடுத்த தண்டனை..

இங்கிலாந்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் ஃபிரெடரிக் வார்டு. இவரது மகன் ஃபிரெடரிக் ஜூனியர் 2015ல் காலமானார்.மகனின் மரணத்திற்கு பிறகு ஃபிரெடரிக்கின் பேரக்குழந்தைகள் ஃபிரெடரிக்கை பார்க்க வரவில்லை.

நுரையீரல் சிக்கலால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.தன்னை பார்க்க பேரக்குழந்தைகள் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்தார்.

5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே தங்களுக்கு எழுதி வைத்ததற்காக அந்த உயிலுக்கு எதிராக அவரது பேரக்குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்க்க வராத பேரன்களுக்கு சொத்தில் பங்கில்லை என ஃபிரெடரிக் எடுத்த முடிவு சரியானது என்றும் அவரது பார்வையில் அது நியாயமானதுதான் என்றும் தீர்ப்பளித்தது.

உறவுகளுக்கு மதிப்பளிக்காமல் சொத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் தற்கால சந்ததியினருக்கு இது நல்ல பாடம் என சமூக வலைதளங்களில் இந்த தீர்ப்பு குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்