உலகம்

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு : பாடசாலைகளுக்கு விடுமுறை!

பனிப்புயல் எச்சரிக்கை அமுலில் உள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) நேற்று அவசரக்கால நிலையை அறிவித்தார்.

இதன்படி நேற்று முதல் இன்று மதியம் வரை  நியூயார்க் நகர வீதிகளில் அத்தியாவசியமற்ற வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

தெருக்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழக்கமான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அத்துடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

நியூயார்கின் தேசிய வானிலை சேவை 17 முதல் 24 அங்குல பனிப்பொழிவு பதிவாகும் என்றும், 60 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!