இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

எலோன் மஸ்க் கண்ணில் மர்ம காயம் – சர்ச்சைகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் கண்ணில் காயத்துடன் வெள்ளை மாளிகையில் தென்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்த நிலையில் அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

என் மகன் Xஉடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது என் முகத்தைக் குத்தமாறு கூறியதாக மஸ்க் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகியிருப்பதாக கூறும் செய்தி ஒரு பக்கம், அவர் கண்ணில் இருந்த காயம் பற்றிய ஊகங்கள் மறுபக்கம் இருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்க் சென்ற ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அதிகளவில் போதைப்பொருள்களை உட்கொண்டதாக New York Times சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அவர் கண்ணில் காயத்துடன் வெள்ளை மாளிகையில் தென்பட்டது மேலும் பல கேள்விகளை எழுப்பியது.

பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோனையும் கேலி செய்தார்.

சில நாள்களுக்கு முன் மக்ரோனின் முகத்தை அவருடைய மனைவி பிரிஜட் தள்ளிவிட்டது காணொளியாகப் பரவியது. அதைப்போல் என் மகனும் என்னை அடித்தான் என்று மஸ்க் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!