வெளிவரும் தேர்தல் முடிவுகள் – கவனத்தை ஈர்த்த சஜித்தின் முகநூல் பதிவு

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது முகநூலில் சதுரங்கம் விளையாடும் படத்தை பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் அவசியம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.
(Visited 7 times, 7 visits today)