இலங்கை

இலங்கையில் காணி தகராறு காரணமாக கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!

கேகாலையில் காணி தகராறு காரணமாக மூதாட்டி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் கேகாலை – திவுல பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்.

அதன் பின்னர் சுமார் 2 மாதங்களாக கேகாலை போதனா வைத்தியசாலையில் குறித்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர், அவர் நேற்று (02) காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை புஸ்ஸல்லா பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!