இலங்கை செய்தி

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா, வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷ்யா, வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

மேற்கண்ட நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஆயுத குழுக்களின் அச்சுறுத்தல்கல் இருப்பதாவும், பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும், வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!