இலங்கை

இலங்கையில் 7 இலட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்!

இலங்கையில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள் குறித்த விரிவான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புத் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கிராம புறங்களிலேயே அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக கூறப்படுகின்றது.

எனினும், பார்வை குறைபாட்டு விகிதம் மாத்திரம் தோட்டப்புறங்களில் மிக உயர்வாகக் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் 5 வயதுக்கு மேற்பட்ட 2 கோடியே 56 இலட்சத்து 6 ஆயிரத்து 680 மொத்த சனத்தொகையில், குறைந்தது ஒரு குறைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 27 ஆயிரத்து 293 என இனங்காணப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில், ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் குறைபாடுகளோடு உள்ளனர் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குறைபாடுகளின் வகைகளைப் பார்க்கும் போது, நடப்பதில் அல்லது படிகளில் ஏறுவதில் பிரச்சினை உள்ளவர்களே அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாகப் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருப்பதோடு, சுயமாக தம்மை தாமே கவனித்துக்கொள்வதில் சிரமம் உள்ளவர்களாக ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 292 பேர் உள்ளனர்.

ஞாபகசக்தி அல்லது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவதில் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 826 பேரும், செவிப்புலன் குறைபாடு உள்ளவர்கள் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 97 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஏனையோருடன் தொடர்பாடல் மேற்கொள்வதில் குறை உள்ளவர்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆய்வில் மாவட்ட ரீதியாக ஒப்பிடுகையில், கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியாக 75 ஆயிரத்து 118 பேர் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர்.

இதேவேளை, குறைபாடுகள் உள்ளவர்களில் திருமணமானவர்கள் 3 இலட்சத்து 85 ஆயிரத்து 815 பேராக பதிவாகியுள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!