அரசியல் இலங்கை செய்தி

போரை காட்டிக்கொடுத்தாரா மஹிந்த?

“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என Sarath Fonseka பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார்.
மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே பேசிவருகின்றார்.

பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. தனது தனிப்பட்ட பகைமையை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியல் செய்கின்றார்.

எனவே, பொன்சேகா கூறும் விடயங்கள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவரின் கருத்தை மக்கள் கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

போரை முடிக்கும்போது இருந்த இராணுவத் தளபதி என்பதால் அவரை நாம் மதிக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுக்க முற்பட்டார் எனக் கூறுவது அப்பட்டமான பொய். மக்களை பாதுகாப்பதற்காகவே பிரபாகரனை சரணடைய சொன்னார்.

ஏனெனில் வடக்கில் உள்ள மக்களும் தனது மக்கள் என அவர் கருதினார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!