டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது.
பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.
ஜனநாயக, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதேசுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என அவர் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு பங்களாதேஷ் தேசிய கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான் கருத்து வெளியிடுகையில்,
‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஒரு ஜனநாயக நாடு, மக்களின் தீர்ப்பை அங்கீகரித்திருப்பது மிகவும் நல்லது. நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார்.
அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என
குறிப்பிட்டுள்ளார்.




