ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தும் முயற்சி தீவிரம் – அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

ஜெர்மனியில் குடியுரிமைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ள கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமாது பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் அமைச்சர் நான்சி இந்த விடயம் தொடர்பாக சில வல்லுனர்களுடன் ஆலோசனைகளை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை 3வது நாடுகளுக்கு அனுப்பி இந்த நாட்டில் வைத்து அகதி விண்ணப்பங்களை பரிசீலணை செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரித்தானியாவானது ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை அனுப்பி அவர்களுடைய அகதி விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு எண்ணி இருந்த நிலையில் பிரித்தானியாவின் உச்ச நீதிமன்றமானது இந்த விடயம் பிரித்தானியாவின் அடிப்படை சட்டத்துக்கு விரோதமான முறையில் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!