ஐரோப்பா செய்தி

தலைமுறைக்கான பாரிய சீர்திருத்தம் – பாடசாலை உணவில் புதிய விதிகளை அறிவித்த இங்கிலாந்து

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுகளை சீர்திருத்தும் புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், எண்ணெயில் பொரித்த உணவுகள் தடை செய்யப்படுகின்றன. மேலும், அதிக சர்க்கரை கொண்ட உணவுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

புதிய நடைமுறைகளின்படி, மாணவர்களுக்கு சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களுக்கு பதிலாக பெரும்பாலும் பழங்கள் வழங்கப்படும். இதேவேளை, சொசேஜ் ரோல் மற்றும் பீட்சா போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தினமும் வழங்க பாடாசாலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் கல்லூரித் தலைவர்கள் சங்கம், இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளதுடன், இதற்கான கூடுதல் நிதி அவசியம் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில அரசியல் கட்சிகள் பாடசாலை உணவுக்கான நிதியை உயர்த்த வேண்டும் எனக் கோரியுள்ளன. மற்றொரு தரப்பு, அரசு மக்களின் வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடு செலுத்துகிறது என விமர்சித்துள்ளது.

இதனிடையே, கல்வித்துறை இந்த மாற்றங்கள் மூலம் மில்லியன் கணக்கான மாணவர்கள் தினமும் சத்தான உணவைப் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

கல்வி செயலாளர் இந்த திட்டத்தை, “ஒரு தலைமுறையில் பள்ளி உணவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!