டேட்டாவை திருடும் செயலி – உடனடியாக நீக்க வேண்டிய செயலிகள்

நான் அன்றாடம் பயன்படுத்தும் பல பிரபலமான அப்ளிகேஷன்கள் நம்முடைய டேட்டாக்களை எடுத்துக் கொள்கின்றன என்பது பெரும்பாலான ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு தெரியும்.
ஆனால், இப்படி டேட்டாக்களை எடுக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் பட்டியலில், நீங்கள் தினமும் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், இவ்வாறு அப்ளிகேஷன் மூலமாக சேகரிக்கப்படும் டேட்டாக்களால் உங்களுக்கு பிரைவசி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாமா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
Apteco என்ற ஆய்வு நிறுவனம் அப்ளிகேஷன்கள் சேகரிக்கும் டேட்டாக்களின் அளவைப் பொறுத்து மிகவும் தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்களின் டாப் 10 பட்டியலை அறிவித்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலானவர்களால் தினமும் சோஷியல் மீடியா இல்லாமல் வாழ முடியாது என்பதை சாதகமாக பயன்படுத்தி அப்ளிகேஷன்கள் நம்முடைய டேட்டாக்களை சேகரிக்கின்றனரா? Apteco நிறுவனம் மற்றும் அதன் அறிக்கை இதற்கான பதில்களை அளிக்கிறது.
Facebook, Instagram மற்றும் Threads போன்ற அப்ளிகேஷன்கள் டாப் 3 பொசிஷனில் உள்ளன. இது நிச்சயமாக பலருக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கலாம். இந்த அப்ளிகேஷன்கள் நம்முடைய டேட்டாக்களை தனிப்பட்ட முறையில் சேகரித்து வருகின்றன. இப்படி அவர்கள் சேகரிப்பதற்கான ஆப்ஷனை நாம் டிசேபிள் செய்யாதவரை தொடர்ந்து நம்முடைய டேட்டாக்கள் அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், இப்படி அனுமதியை டிசேபிள் செய்வதற்கான ஆப்ஷன் என்பது ஐபோன் அல்லது ஐபேடில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய டேட்டாக்களை சேகரிக்கும் பிற அப்ளிகேஷன்கள்: மெட்டா நிறுவனம் முன்னணி பொசிஷனை எடுத்துக் கொண்ட போதிலும், LinkedIn, Pinterest, Amazon (Alexa உட்பட), Youtube மற்றும் X போன்ற பிற அப்ளிகேஷன்களும் நம்முடைய டேட்டாக்களை தொடர்ந்து சேகரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த பட்டியல்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி என்றால் இந்த மாதிரியான அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவதை நாம் நிறுத்திவிட வேண்டுமா என்ன? இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு அப்ளிகேஷன்களை டெலிட் செய்வது ஒரு சொல்யூஷனாக இருக்காது என்று Apteco நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய தரவுகள் சேகரிக்கப்படுவதை குறைத்துக் கொள்வதற்கான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் ஆகிய இரண்டிலும் சாத்தியம்தான்.
Uber அல்லது Zomato போன்ற அப்ளிகேஷன்களுக்கு நீங்கள் லொகேஷன் ஆக்சஸ் கொடுக்காவிட்டால் உங்களுக்கு சிறந்த டெலிவரி அனுபவம் கிடைக்காமல் போகலாம். ஆனால், அதன் பயன்பாட்டை உங்களால் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக அந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்போது அல்லது பேக்ரவுண்டில் அதன் செயல்பாட்டை குறைப்பதன் மூலமாக இதனை நீங்கள் செய்யலாம். மேலும் ஸ்டோரேஜ், லொகேஷன், கேமரா மற்றும் போன் லாகிற்கான அனுமதியை மேனுவலாக வழங்கலாம்.