புயல் காற்று பாதிப்பு முடிந்தது – படகுப் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்
வார இறுதியில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஐல் ஆஃப் மேன் மற்றும் லங்காஷயர் (Isle of Man and Lancashire) இடையேயான படகுப் பயணங்கள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
ஹெய்ஷாம் (Heysham)நோக்கி செல்லும் மாலை மற்றும் இரவு நேரப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேங்க்ஸ்மேன் (Manxman) கப்பல் இன்று காலை 8.30 க்கு டக்ளஸிலிருந்து (Douglas)புறப்பட்டது.
இதேவேளை, வானிலை காரணமாக முன்பு வட அயர்லாந்து பயணத்துக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த இந்தக் கப்பல், பின்னர் லார்ன் (Larne) நோக்கி மீண்டும் இயக்கப்பட்டது.
மேலும், “மனன்னன்” என்ற அதிவேகப் படகின் லிவர்பூல் சேவை உள்ளிட்ட பல பயணங்களும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக வார இறுதியில் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே, மாற்றுக் கப்பலான “பென்-மை-க்ரீ” ஞாயிற்றுக்கிழமை மாலை ஐல் ஆஃப் மேன் மற்றும் ஹெய்ஷாம் இடையே சரக்குப் பயணத்தை மேற்கொண்டது.





