CSK அணி மீண்டும் தோல்வி!
IPL 2026 தொடரில் தமது அணி களம் கண்ட 2ஆவது போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Chennai Super Kings தோல்வி அடைந்துள்ளது.
IPL 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings அணிகள் நேற்று மோதின.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெடடுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.
210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
சென்னை அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும்.




