53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா!
53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்புடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
சீனா, தான் தூதரக உறவுகளைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மே 1, 2026 முதல் இந்த வரியை அமுற்படுத்தவுள்ளது.
இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கூட்டுப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திட தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் “பசுமை சேனல்” போன்ற மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் மூலம் சீனாவிற்கு ஆப்பிரிக்க ஏற்றுமதிகளுக்கான சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





