உலகம்

இங்கிலாந்து மற்றும் கனடாவின் சுற்றுலா பயணிகளுக்கு பயண சலுகை வழங்கிய சீனா!

இங்கிலாந்து மற்றும்  கனடாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வரும் 17 ஆம் திகதி முதல் விசா இன்றி 30 நாட்கள் வரையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா, வணிகம் அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்காக மேற்படி விசா இன்றிய நுழைவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை இவ்வருடத்தின்  டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தால் இலட்சக்கணக்கான பிரித்தானிய சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் என்றும், சுமார் 620,000 பேர் நாட்டிற்கு விஜயம் செய்வார்கள் என்றும் சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் சீன விஜயத்தை தொடர்ந்து இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!