ஐரோப்பா

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நம்பிக்கையில் பிரித்தானிய வங்கி!

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின்படி, பிரித்தானியாவில்  பணவீக்கம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 3.4 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, ஜனவரியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்கான 02 சதவீதத்திற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்க வீழ்ச்சியானது, அடுத்த மாதம் இங்கிலாந்து தேசிய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.

இதேவேளை வாழ்க்கைச் செலவைக் குறைப்பது தனது முதன்மையான முன்னுரிமை என்று சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!