உலகம் செய்தி

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே குண்டுவீச்சி தாக்குதல் – நால்வர் பலி!

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே இஸ்ரேலியப் படைகள் இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவத்துள்ளது.  இருப்பினும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை.

அத்துடன் லெபனானின் மஜ்தால் அஞ்சர்  (Majdal Anjar) பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல் குறித்து PIJ எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

PIJ என்பது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள ஒரு ஆயுதக் குழுவாகும், இது ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்காக காசாவில் ஹமாஸுடன் இணைந்து போராடுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!