முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரின் மோசமான செயற்பாடு!! பெற்றோர் எடுத்த நடவடிக்கை
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளிடம் கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த மாணவர்களின் பெற்றோர் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியின் பாடம் நடத்திய காலப்பகுதியில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தனது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாகாண உயர்கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பெற்றோர்களிடம் அதிபர் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)