ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு – 05 பேர் உயிரிழப்பு!
ஆஸ்திரிய ஆல்ப்ஸ் (Austrian Alps) மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 03 பேர் உயிரிழந்தனர்.
பின்னர் அதற்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
இந்த குளிர்காலத்தில், பனிச்சரிவு காரணமாக ஆஸ்திரியாவில் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





