மே மாதம்வரை எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!
ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியா தனது எரிபொருள் இருப்பை எதிர்வரும் மே மாதம்வரை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் Chris Bowen மேற்படி தகவலை இன்று (06) வெளியிட்டுள்ளார்.
மே மாதம் இறுதி வரை தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டபூர்வ ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் இக்கட்டான காலக்கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விநியோகத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. எரிபொருள் சிக்கனத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச பொது போக்குவரத்து சேவையை இரு மாநிலங்கள் முன்னெடுத்துவருகின்றன.





