ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூவை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஆதரவு

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew) அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்கப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது அரசாங்கம் ஆதரவு வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese ) தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்டார்மருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இளவரசர் உள்ளிட்ட பட்டங்கள் நீக்கப்பட்டபோதிலும், ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான அவரது தொடர்புகள் குறித்து நீண்டகால சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் வாரிசு வரிசையில் இருந்து அவரை நீக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பிரித்தானிய அரசு பரிசீலித்து வருகிறது.

இதனிடையே பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த சந்தேகத்தின் பேரில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் எந்தவித தவறும் செய்யப்படவில்லை என அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது சகோதரரும், மன்னருமான மூன்றாம் சார்லஸ் மன்னர், “இந்த விவகாரம் உரிய அதிகாரிகளால் முழுமையான, நியாயமான முறையில் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!