ஐரோப்பா

செர்னோபில் அணுமின் நிலையத்தை குறிவைக்கும் ரஷ்யா!

உக்ரைனின் பயன்பாட்டில் இல்லாத செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ரஷ்யா  ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்படி நடவடிக்கையானது பாரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனின் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ (Ruslan Kravchenko), முன்னர் அறிவிக்கப்படாத ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை விவரித்துள்ளார்.

2022 படையெடுப்பிலிருந்து செர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி அணுமின் நிலையம் ஆகிய இரண்டும் ரஷ்யாவின் அதிவேக கின்ஷால் ஏவுகணைகளின் பறக்கும் பாதையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையங்களிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிற்குள் 35 கின்ஷால் ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு இராணுவ ரீதியான நியாயம் இல்லை என்றும், அவை முற்றிலும் அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!