இந்தியா

செங்கோட்டை அருகே தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை!

டெல்லி செங்கோட்டை அருகில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோயிலொன்றை பயங்கரவாதிகள் இலக்கு வைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை இலக்காகக் கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியொன்றில் கடந்த 6 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பழிவாங்கம் நோக்கிலேயே லஷ்கர்-இ-தொய்பா இவ்வாறு முயற்சிக்கின்றது.

இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கண்காணிப்பில் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 10 திகதி டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!