உலகம் செய்தி

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: லெபனானில் 89 பேர் பலி! ஈரான் கடும் எச்சரிக்கை!

லெபனானில் பல பகுதிகளிலும் இஸ்ரேல் இன்று நடத்திய உக்கிர தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர். 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இது தொடர்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலும் இதற்கு இணங்கியுள்ளது.

குறித்த போர் நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போர் நிறுத்தம் லெபனான் விவகாரத்தில் தொடர்புபடாது எனக் குறிப்பிட்டு, அங்கு இஸ்ரேல் இன்று உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது.

இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போர் விதி மீறல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!