பூமியின் பிரமிக்க வைக்கும் படங்களைப் பிடித்த ஆர்டெமிஸ் II !
ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள் நிலவை நெருங்கிச் செல்லும் பயணத்தின்போது, பூமியின் பிரமிக்க வைக்கும் படங்களைப் படம்பிடித்துள்ளனர்.
குறித்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இந்தப் படங்களில், விண்கலத்தின் சாளரத்திலிருந்து தெரியும் பூமியின் வளைந்த பகுதியும், சுழலும் மேகங்களுடன் கூடிய புவியின் முழுமையான காட்சி பதிவாகியுள்ளது.

மூன்று அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர் ஒருவர் உள்ளடங்களாக பயணிக்கும் குழுவினர் வரும் திங்கட்கிழமை நிலவை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் நேராக பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு, தங்கள் ஓரியன் விண்கலத்தில் நிலவைச் சுற்றி வருவார்கள்.
இதன் மூலம், 1972-ல் அப்பல்லோ 17-க்குப் பிறகு நிலவுக்கு வந்த முதல் பயணிகள் என்ற பெருமையை அவர்கள் பெறுகிறார்கள்.




