பொழுதுபோக்கு

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்.. நெல்சனின் மனைவி பதிலடி

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, முன்னாள் அதிமுக, திமுக, பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதியானவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளியாக மொட்டை கிருஷ்ணன் பற்றிய விஷயம் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் மொட்டை கிருஷ்ணனை விசாரிக்க தொடங்கினார்கள்.

ஆனால் அதற்குள் மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாகி போய்விட்டார். பிறகு அவருடைய செல்போன் நம்பரை டிராக் பண்ணியதில் அவர் யாரிடம் பேசி இருக்கிறார் என்பதன் மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்று அடுத்தடுத்து விசாரணை செய்யப்பட்டது. அப்பொழுது தான் யாரும் எதிர்பார்க்காத விஷயமாக ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது மொட்டை கிருஷ்ணனுடன் கடைசியாக பேசியது திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா என்பது தெரிய வந்துவிட்டது. இதனால் இந்த கொலைக்கும் மோனிஷாவுக்கும் ஏதாவது சம்பந்தமா என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் மோனிஷாவின் அக்கவுண்டில் இருந்து மொட்டை கிருஷ்ணனுக்கு லட்சக்கணக்கில் பணம் ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து மொட்டை கிருஷ்ணன் தப்பித்து போவதற்கு நெல்சன் வீட்டில் தான் அடைக்கலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாயிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சனின் மனைவி மோனிஷா பகிரங்கரமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது மோனிஷாவின் தரப்பு வழக்கறிஞர் பொது அறிவிப்பு நோட்டீசை வெளியிட்டு இருக்கிறார். அதில் மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியது உண்மைதான் என்று தெரிய வந்திருக்கிறது. இது சம்பந்தமான விசாரணை ஏற்கனவே ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்து முடிந்து விட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்த மாதிரி பெயரை டேமேஜ் பண்ணக்கூடாது என்றும், என் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு பணம் போனதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்ற பொழுது இந்த வதந்தியை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று மோனிஷாவின் வழக்கறிஞர்கள் நோட்டீஸில் தெள்ளத் தெளிவாக பதில் அளித்திருக்கிறார்கள்.

இனி இது சம்பந்தமாக எந்த அவதூறுகளையும் பரப்ப வேண்டாம். இத்தகைய செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், இது சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மோனிஷாவின் வக்கீல் சட்ட ரீதியாக கேட்டிருக்கிறார்.

இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எனது கட்சிக்காரராக இருக்கும் மோனிஷா நெல்சன் நலன் மற்றும் நற்பெயரை கருதி சட்ட நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!