அதிரடி நடவடிக்கையில் Amazon – இனி காரும் வாங்கலாம்

ஐரோப்பா உட்பட உலகம் முழுவரும் Amazon தளத்தில் கூடிய விரைவில் Hyundai வாகனங்கள் விற்கப்படவுள்ளதென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வாகனங்கள் Amazon தளத்தில் வாங்கும் மற்ற பொருள்கள் போன்று நேரே வீட்டு வாசலுக்கு வராது. இணையம் மூலம் வாங்கிவிட்டு வீட்டின் அருகே உள்ள வாகனக் கடையில் காரைப் பெற்றுக்கொள்ளலாம்.
காருக்கு மாதந்தோறும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களையும் Amazon வழங்கும்.
காரில் உள்ள தொழில்நுட்பங்கள், அதை எப்படிப் பராமரிப்பது ஆகியவை வாகனக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்படும்.
இணையம் மூலம் கார்களை வாங்குவது புதிதல்ல. ஏற்கனவே ஏராளமான பொருள்கள் விற்கப்படும் Amazon தளத்தில் இனி கார்களையும் வாங்கலாம் . விரைவில் மற்ற கார் நிறுவனங்களும் அதில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)