செய்தி தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 09 பேருக்கும் மரண தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பொலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 பொலிஸாரை
கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

கைதான 9 பொலிஸாருக்கு குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.

அவர்களுக்கான தண்டனை விவரம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் இந்த வழக்கு கடந்த மார்ச் 30 ஆம் திகதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின.

இதனால் இந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் திபதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!