அக்குரேகொடை கொலை சம்பவம் – விசாரணைகள் 80 வீதம் நிறைவு
அக்குரேகொடை கொலை சம்பவம் குறித்த விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளன.
பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 3 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏனைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.





