வாகன இறக்குமதிக்கு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
வாகன இறக்குமதி தடைகள் நீக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் விரைவில் தமக்கு வழங்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
இறக்குமதி துறையில் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ராஜாங்க அமைச்சர் கூறினார்.
அனைத்து வாகனங்களின் இறக்குமதியையும் ஒரே தடவையில் ஆரம்பிக்காமல் பல பிரிவுகளின் கீழ் மேற்கொள்வது மிகவும் நடைமுறைக்குரியது என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)